தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்களுக்கு விழுப்புர மாவட்டத்தில் அரசு வேலை! பிப்ரவரி 29 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!
விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக “MPHW” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 29 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கம்
பணி:
*MPHW
பணியிடங்கள்: 06
கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.300/- ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
*நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-02-2024 விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஆகும்.