தவெக பேச்சே நமக்கு வேண்டாம்.. ஒரே போடாய் போட்ட அண்ணாமலை!! 

Photo of author

By Savitha

தவெக பேச்சே நமக்கு வேண்டாம்.. ஒரே போடாய் போட்ட அண்ணாமலை!! 

Savitha

We don't want to talk about it.
தவெக பேச்சே நமக்கு வேண்டாம்.. ஒரே போடாய் போட்ட அண்ணாமலை!!
நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். அதன்பின் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிட போவதாகவும், முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்த தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின் இரண்டு கோடி நிர்வாகிகளை நியமிப்பது தான் இலக்கு என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலையிடம் கேட்டபோது, ” அவர் வண்டியை அவர் ஓட்டட்டும்.. என் வண்டியை நான் ஓட்டுகிறேன்.. என் வண்டியை பற்றி கேளுங்கள் கூறுகிறேன்..” என்று கூறினார்.
மேலும் “ஆட்சி மாற்றம் 2026 இல் நடக்கும். அதன் பிறகு லேம்டக் கவர்மெண்ட் தான். திமுக தனக்கான தன்மையை இழந்து விடும். ஒன்றரை வருடம் ஆட்சியில் மட்டும்தான் இருப்பார்கள். ” என்று கூறினார்.