தொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பை கரைத்து வெளியேற்ற இந்த விதையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

0
86
#image_title

தொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பை கரைத்து வெளியேற்ற இந்த விதையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

எண்ணெய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருதல், சோம்பேறித் தனமான வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் உடல் எடையை மளமளவென அதிகரித்து விடுகிறது.

உடல் எடை அதிகரித்தால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உருவாகும். இதை குணப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சித்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி துண்டு
2)சியா விதை
3)தேன்
4)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிண்ணம் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சியா விதை போட்டு தண்ணீர் ஊற்றவும். இதை ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும். அடுத்து ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு ஒரு உரலில் நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு கொரகொரப்பான பதத்திற்கு இடித்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் ஊறவைத்த சியா விதை மற்றும் இடித்த இஞ்சி போட்டு சில நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்.

இந்த நீரில் சிறிது தேன் கலந்து காலை நேரத்தில் குடித்து வந்தால் தொப்பையில் தேங்கி கிடக்கும் கொழுப்பு அனைத்தும் கரைந்து வெளியேறும்.