பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ் !!

0
180
#image_title

பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ் !!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சியே வென்று பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியாக கூறிக்கொண்டுள்ளார்.

இதனை உறுதப்படுத்தும் விதமாகவே தமிழகத்தில் இன்றைய அரசியல் களம் உள்ளது.

தற்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன்,
தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பாஜக விரும்புகிறது, இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றப்பாடுபடுகிறது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களின் பொருளாதாரம் முன்னேறும் என கூறியுள்ளார்.

அமமுக கட்சியும் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதன் மூலம் பாஜக தமிழகத்தில் இன்னும் வலிமையான கட்சியாக உருவேடுத்து வருகிறது.

author avatar
Savitha