Kerala Recipe: கேரளா ஸ்டைலில் நாவூறும் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது?

0
252
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் நாவூறும் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது?

மாங்காய் என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இஷ்டமான ஒன்றாக இருக்கிறது. இதில் பச்சை மாங்காய் கொண்டு எச்சில் ஊறவைக்கும் ஊறுகாய் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)மாங்காய்(பெரிய அளவில்) – 4
2)கல் உப்பு – தேவையான அளவு
3)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
4)கடுகு – ஒரு தேக்கரண்டி
5)தனி மிளகாய் தூள் – 6 தேக்கரண்டி
6)பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
7)வெந்தயத் தூள் – 1/2 தேக்கரண்டி
8)வினிகர் – 3 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் விதையை நீக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாங்காய் துண்டுகளை போட்டு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து ஒரு நாள் இரவு ஊற விடவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் கடுகு போட்டு பொரிய விடவும். அதன் பின்னர் பெருங்காயத் தூள், வெந்தயத் தூள் சேர்த்து போடவும்.

அதன் பின்னர் உப்பில் ஊற வைத்துள்ள மாங்காய் துண்டுகளை போட்டு கிளறவும். பிறகு காரத்திற்காக தனி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

மாங்காய் வெந்து வந்ததும் சிறிது வினிகர் சேர்த்து நன்கு வேக விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த மாங்காய் ஊறுகாயை நன்கு ஆற விட்டு ஒரு பாட்டிலில் போட்டு சேமித்துக் கொள்ளவும். இந்த முறையில் ஊறுகாய் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

Previous articleஇந்த எண்ணெய் உங்கள் கை கால் மூட்டு வலியை முழுமையாக குணமாக்கும்!
Next articleசோம்பலை முறிக்க உதவும் சோம்பு தண்ணீர்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன?