Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் இலை அடை! இதை எப்படி செய்யனும் தெரியுமா?

0
195
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் இலை அடை! இதை எப்படி செய்யனும் தெரியுமா?

பச்சரிசி மாவில் பூரணம் போட்டு வாழை இலையில் வைத்து மடக்கி வேக வைக்கும் இலை அடை கேரளாவில் ஸ்பெஷல் உணவு ஆகும். இதை கேரளா முறைப்படி செய்வது குறித்து தெளிவாக விளக்கப்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பச்சரிசி மாவு – 1 கப்
2)தேங்காய் துருவல் – 1/2 கப்
3)வெல்லம் – 1/2 கப்
4)சீரகம் – 1/2 தேக்கரண்டி
5)உப்பு – தேவையான அளவு

இலை அடை செய்யும் முறை:

ஒரு கிண்ணத்தில் பச்சரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய் மற்றும் பொடித்த வெல்லம் போட்டு கலக்கவும். அதனை தொடர்ந்து தேவையான அளவு உப்பு மற்றும் சீரகம் போட்டு கலந்து விடவும்.

அடுத்து வாழை இலையை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அந்த வாழை இலையில் தயார் செய்து வைத்துள்ள பச்சரிசி மாவை சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி வைக்கவும். பிறகு அந்த மாவின் மேல் தயாரித்து வைத்துள்ள பூரணத்தை வைத்து இலையை மடக்கி கொள்ளவும்.

அடுத்து இதை இட்லி தட்டில் வைத்து வேக விட்டு எடுத்தால் கமகம சுவையில் இலை அடை தயார்.

Previous articleநடிப்புதான் முக்கியம் என வேலையை உதறிய டாப் 5 நடிகர்கள்! வக்கீல் தொழிலை கைவிட்ட மலையாள சூப்பர்ஸ்டார்!
Next articleசந்தனத்தை இப்படி பயன்படுத்தினால் கருப்பான முகம் வெள்ளையாக மாறும்!