உடலில் உள்ள மங்கு தேமல் ஒரு வாரத்தில் மறைய இந்த க்ரீம் பயன்படுத்துங்கள்!!
நம் உடல் அழகை கெடுக்கும் மங்கு, தேமலை ஆரம்ப நிலையில் குணமாக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவை அதிகளவில் பரவிவிடும்.
இவை ஒரு தொற்று நோய். தேமல் உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தினால் உங்கள் உடலிலும் தேமல் உருவாகத் தொடங்கி விடும். எனவே உடலில் உள்ள மங்கு தேமல் முழுமையாக குணமாக வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட க்ரீமை பயன்படுத்துவது நல்லது.
இதற்கு தேவைப்படும் பொருட்கள்:-
1)ஆவாரம் பூ
2)குப்பைமேனி இலை
3)எலுமிச்சை சாறு
4)அதிமதுரம்
5)காய்ச்சாத பால்
செய்முறை:-
ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூ மற்றும் குப்பைமேனி இலையை வெயிலில் காய வைத்து கொள்ளவும்.
இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடர் செய்து கொள்ளவும். அதிமதுரம் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 50 கிராம் அளவு வாங்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள குப்பைமேனி இலை + ஆவாரம் பூ இலை பொடி 2 தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அதிமதுரப் பொடி 1 தேக்கரண்டி போட்டு கலக்கவும். இதனை தொடர்ந்து 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
இறுதியாக 3 தேக்கரண்டி காய்ச்சாத பால் சேர்த்து க்ரீம் பதத்திற்கு நன்கு கலக்கி கொள்ளவும். இந்த க்ரீமை உடலில் உள்ள மங்கு தேமலின் மீது பூசி குளித்து வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.