சின்னப்பிள்ளைக்கு வீடு தாமதம்.. காரணமே திமுக தான்!! வெட்கமே இல்லாத ஸ்டாலின் – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு!!
நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் கழுகை போல நோட்டமிட்டு பல பிரச்சினைகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். சிறிய இடம் கிடைத்தால் கூட அதனை அரசியலாக்கி விட வேண்டும் என்று நினைக்கின்றனர்.அவ்வாறு தற்பொழுது அமைந்தது தான் சின்ன பிள்ளை அவர்களுக்கு வீடு கட்டி தருவது, அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரை சேர்ந்த மூதாட்டி சின்ன பிள்ளை அவர்களுக்கு பத்மஸ்ரீ மற்றும் ஸ்திரிசக்தி புரஸ்கார் , பிரதமர் வாஜ்பாய் போன்ற விருதுகள் வழங்கப்பட்டது.
அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் அந்த மூதாட்டியின் கால்களை தொட்டு வணங்கியது குறிப்பிடத்தக்கது.அப்பொழுது பிரதமரை சந்தித்த மூதாட்டி தனக்கு ஓர் வீடு கட்டி தருமாறு கேட்டுள்ளார்.பிரதமரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.ஆனால் நாளடைவில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் இந்த மூதாட்டியிடம் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது.அதில், பிரதமர் அவர்கள் எனக்கு வீடு கட்டி தருவதாக கூறினார்.ஆனால் அது குறித்து நடவடிக்கை ஏதும் தற்பொழுது வரை எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த மூதாட்டியின் வீடியோவானது தற்பொழுது வைரலாகியுள்ளது.இந்த வீடியோ முதல்வர் கண்ணில் பட உடனடியாக அவருக்கு வீடு கட்டித் தருமாறு உத்தரவிட்டுள்ளார்.மேற்கொண்டு இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றே போட்டு உள்ளார்.அதில், மூதாட்டி சின்ன பிள்ளை அவர்களுக்கு பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் வழங்கும் வீடானது வழங்கப்படவில்லை என்ற பேட்டியை கண்டேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம், தற்பொழுது உள்ள வீட்டு மனை உடன் கூடுதலாக 380 சதுர அடி வழங்கப்படும்.
அத்தோடு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு புதிய வீடும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் அதற்கான பணிகள் அனைத்தும் இம்மாதம் தொடங்கும் என்று கூறினார்.
ஸ்டாலினின் ட்விட்டுக்கு எதிராக தற்பொழுது அண்ணாமலை ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,
மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இருப்பது வேதனைக்குரியது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அம்மா அவர்களுக்கு, வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது என்பது, திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது கூடத் தெரியாமல் அரசியல் செய்யப் கிளம்பியிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின்.
மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இருப்பது வேதனைக்குரியது.… https://t.co/KhvPp8erBL
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 9, 2024
அது மட்டுமல்லாது, மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்னர் வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருக்கிறார்.அது குறித்துப் பலமுறை முறையிட்ட பின்னரும், அதற்கு எந்தத் தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மா அவர்கள். இவை அனைத்தையும் மறைத்து விட்டு, வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
என கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.