Kerala Recipe: கேரளா கோழி வறுவல் – இப்படி செய்தால் ருசி அதிகரிக்கும்!!

0
209
#image_title

Kerala Recipe: கேரளா கோழி வறுவல் – இப்படி செய்தால் ருசி அதிகரிக்கும்!!

அனைவரும் விரும்பி உண்ணும் கோழி இறைச்சியில் கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)கோழி இறைச்சி – 1/2 கிலோ
2)பெரிய வெங்காயம் – 2(பொடியாக நறுக்கியது)
3)பச்சை மிளகாய் – 2(நறுக்கியது)
4)தக்காளி – 1(நறுக்கியது)
5)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
6)மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
7)கறிவேப்பிலை – 1 கொத்து
8)கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
9)கடுகு – 1 தேக்கரண்டி
10)எண்ணெய் – 4 தேக்கரண்டி
11)இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
12)கரம் மசால் – 1 தேக்கரண்டி
13)உப்பு – தேவையான அளவு
14)கொத்தமல்லி தழை – சிறிதளவு(நறுக்கியது)

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/2 கிலோ இறைச்சி போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசிக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 4 தேக்கரண்டி தேங்காய் ஊற்றி சூடாக்கவும். அதன் பின்னர் கடுகு கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.

பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயத்தின் பச்சை வாடை நீங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒருமுறை வதக்கி எடுக்கவும்.

இதனை தொடர்ந்து சுத்தம் செய்து வைத்துள்ள கோழி இறைச்சியை போட்டு ஒரு கிளறு கிளறவும்.பின்னர் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசால்,கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கோழி இறைச்சியை வேக விடவும்.தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் கோழி கறியை பிரட்டி எடுக்கவும்.பின்னர் வாசனைக்காக சிறிது கொத்தமல்லி தழை சேர்த்தால் சுவையான கோழி வறுவல் தயார்.

Previous articleபரங்கி விதை பரிகாரம் செய்தால் கழுத்தை நெறிக்கு கடன் காணாமல் போகும்!!
Next articleஇரசாயன ஹேர் டைக்கு குட் பாய் சொல்லுங்கள்! இனி இயற்கை ஹேர் டை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துங்கள்!!