உங்கள் உடலில் சர்க்கரை நோய் இருக்கா இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது தெரிஞ்சுக்கோங்க!

0
256
#image_title

உங்கள் உடலில் சர்க்கரை நோய் இருக்கா இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது தெரிஞ்சுக்கோங்க!

பரம்பரை நோயாக இருக்கும் சர்க்கரை நோய் உடலில் இருக்கின்றதா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

பரம்பரை நோய் என்று சர்க்கரை நோய் ஏன் அழைக்கப்படுகின்றது என்றால் இந்த சர்க்கரைப் நோயானது மற்ற நோய்களைப் போல அல்லாமல் நம்முடைய தாத்தா அல்லது பாட்டிக்கு சர்க்கரை நோய் இருந்திருக்கும். அவர்களை தொடர்ந்து நம்முடைய பெற்றோருக்கு சர்க்கரை நோய் வந்திருக்கும். மேலும் நம்முடைய பெற்றோரை தொடர்ந்து நமக்கும் சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கின்றது. நம்மை தொடர்ந்து நம்முடைய மகன் பேரன் என்று அடுத்தடுத்து சர்க்கரை நோய் பாதிப்பு என்பது குடும்பத்தில் ஒருவருக்கு இருக்கும். அதன் காரணமாகவே சர்க்கரை நோயை பாரம்பரிய பரம்பரை நோய் என்று அழைக்கிறோம்.

சர்க்கரை நோயை நீரிழிவு நோய் என்றும் அழைக்கப்படுகின்றது. நீரிழிவு நோய் ஒரு முறை வந்துவிட்டால் நாம் நம்முடைய உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாக செல்லாமலும் மிகவும் குறைவாக செல்லாமலும் பார்த்துக் கொள்ளை வேண்டும். தினசரி சர்க்கரை நோய்க்கு உண்டான மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நெயில் இரண்டு விதமாக அதாவது டைப் 1 மற்றும் டைப் 2 என்று இரண்டு விதமாக இருக்கின்றது. இந்த சர்க்கரை நோய் நமக்கு உள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து கண்டுபிடிக்கும் முறை…

பொதுவாக சாப்பிடும் முன்பு வெறும் வயிற்றில் சர்க்கரை பரிசோதனை நாம் செய்வோம். அப்பொழுது சர்க்கரையின் அளவு உடலில் சாதாரணமாகத் தான் இருக்கும். அதுவே சாப்பிட்டு 2 மணி நேரம் கழிந்து சுகர் டெஸ்ட் அல்லது இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரையின் தாக்கம் பற்றி தெரிய வரும்.

உடலில் சர்க்கரை நோய் உள்ளதா இல்லையா என்பது குறித்து தெரிந்து கொள்ள முதலில் 12 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் வயிற்றை காலியாக வைக்க வேண்டும். 12 மணி நேரம் கழிந்த பின்னர் குளுக்கோஸ் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இதை குடித்த பின்னர் சர்க்கரையின் அளவு 140க்கும் குறைவாக இருக்க வேண்டும். அவ்வாறு குறைவாக இருந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. அதுவே 200க்கும் மேல் அதிகமாக சர்க்கரை அளவு இருந்தால் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்பது தான் அர்த்தம். உடனே கண்டிப்பாக மருத்துவரை பார்க்க வேண்டும்.

Previous articleமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!
Next articleஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன்! கூடுதல் பொறுப்பு இவருக்கா?