பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் இத்தனை நன்மைகள் உண்டாகும்!!
பங்குனி உத்திரம் முருக பெருமானுக்கு உகந்த நாள்.இந்த நாளில் திருமணமான தம்பதிக்கு விசேஷ நாளாக இருக்கிறது.இந்த நல்ல நாளில் விரதம் இருந்தால் கோடி நன்மைகள் உண்டாகும்.
பங்குனி உத்திர விரத நன்மைகள்:-
முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்க இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும்.
கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை விலகி அன்பு அதிகரிக்க இந்த நாளில் விரதம் இருக்கலாம்.
உடலில் நோய் இன்றி ஆரோக்கியமாக வாழ பங்குனி உத்திர விரதம் உதவும்.வீட்டு பொருளாதார நிலை முற்றிலும் மாறும்.
செல்வ செழிப்பு ஏற்பட்டு வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.தங்களுக்கு இருந்து வந்த எதிரி தொல்லை முழுமையாக நீங்கும்.
திருமணம் ஆன பெண்களுக்கு பங்குனி உத்திரம் விசேஷ நாளாக உள்ளது.இந்த நாளில் புதிதாக தாலி கயிறு மாற்றவதால் கணவன் ஆயுள் கூடும்.தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
இந்த பங்குனி உத்திர நாளில் தான் மகாலட்சுமி தேவி அவதரித்தார்.எனவே இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் செல்வ செழிப்போடு வாழலாம்.