முடி உதிர்வதை தடுத்து நீளமாக வளரச் செய்ய வேண்டுமா? அப்போ கொய்யா இலை பேக் யூஸ் பண்ணுங்க!
பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் தற்பொழுது சந்தித்து வரும் பிரச்சனை என்னவென்றால் அது முடி உதிர்தல் பிரச்சனை தான். உடல் சூடு, ஹார்மோன் பிரச்சனை, தலையில் அதிகமாக கெமிக்கல் பயன்பாடு என்று பலவித காரணங்களால் முடி உதிர்வது தொடர்கின்றது.
இந்த முடி உதிரும் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறுவதற்கு பலரும் பலவித மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு கொய்யா இலை பேக் பயன்படுத்தினால் முடி உதிர்வது முற்றிலுமாக நிற்கும். மேலும் முடி நிறமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும். அந்த கொய்யா இலை பேக் தயார் செய்ய தேவையான பொருட்கள், எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* கொய்யா இலைகள்
* கடுகு எண்ணெய்
* முட்டை
செய்முறை…
முதலில் ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை சுத்தம் செய்து ஒரு மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் ஒரு முட்டையை உடைத்து மஞ்சள் கருவுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக இதில் இரண்டு டீஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்க்க வேண்டும். பின்னர் இதை நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை உச்சந்தலையில் தொடங்கிய முடி முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் அப்படியே விட்டு 30 நிமிடங்கள் கழிந்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை வாஷ் செய்து கொள்ள வேண்டும்.
இந்த கொய்யா இலை பேக்கை வாரத்தில் ஒரு முறை என்று மூன்று மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தி வந்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். முடி உதிர்தல் பிரச்சனை குணமாகி புதிதாக முடி வளரும். நிறமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும் முடி வளரத் தொடங்கும்.