அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் – ஓ. பன்னீர்செல்வம்!
ராமநாதபுரம் மக்கள் நீதி, தர்மத்தின் படி தீர்ப்பு வழங்குவார்கள் என்பதால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடன் கூட்டணியிட்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களின் உரிமையை மீட்கும் பொறுப்பில் உள்ளேன் எனவே தேர்தலில் வெற்றி பெற்று உரிமையை மீட்பேன்.
மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பொதுக்குழு.
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திறுந்தார்.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதி மன்றம் அதிமுகவின் அடையாளங்களான சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்த நிலையில், அதிமுக தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது அதிமுக கட்சியை மீட்க தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவேன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.