பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்!!

0
71
#image_title

பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்!!

பெண்கள் திருமணமாகி பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சில விஷயங்களை செய்யவே கூடாது.

அதாவது தாய் வீட்டில் இருக்கும் வரை பெண்களுக்கு எந்த ஒரு கட்டுப்படும் இல்லை.ஆனால் திருமணம் ஆனப் பின்னர் பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுதும் அதேபோல் புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கு செல்லும் பொழுதும் சில தவறுகளை செய்யக் கூடாது.

தாய் வீட்டில் தங்களுக்கு பிடித்த பயன்படுத்தப்பட்ட இரும்பு பொருட்கள் இருந்தால் அதை ஒருபோதும் புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக் கூடாது.கத்தி,அரிவாள் போன்ற கூர்மையான பொருட்களை எடுத்துச் செல்வதை முழுமையாக தவிர்க்கவும்.

சமயலறை பொருட்களான மஞ்சள்,உப்பு,புளி,எண்ணெய் போன்ற பொருட்களை தாய் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லக் கூடாது.

அதேபோல் தாய் வீட்டில் உள்ள ஈரத் துணியை புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது.தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் நாளில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கவோ,எண்ணெய் வைத்து கூந்தலை பின்னவோ கூடாது.

புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கு செல்கிறீர்கள் என்றால் செவ்வாய்,வெள்ளி ஆகிய தேதிகளில் செல்வதை தவிர்க்கவும்.