மேனியை மிருதுவாக்கும் தேங்காய் எண்ணெய்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

0
232
#image_title

மேனியை மிருதுவாக்கும் தேங்காய் எண்ணெய்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

சுத்தமான தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சரும வறட்சி,தோல் பிரச்சனை சரியாகும்.இந்த தேங்காய் எண்ணையை வைத்து சோப் தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)சுத்தமான தேங்காய் எண்ணெய்
2)காஸ்டிக் சோடா
3)வாசனை திரவியம்
4)சோப் மோல்ட்

தேங்காய் எண்ணெய் சோப் தயாரிப்பது எப்படி?

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் 150 கிராம் காஸ்டிக் சோடா(சோடியம் ஹைட்ராக்சைடு) சேர்க்கவும்.பிறகு அதில் 400 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு மரக் குச்சி கொண்டு கலக்கவும்.

இதை கையில் தொடக் கூடாது.அதுமட்டும் இன்றி தண்ணீரில் காஸ்டிக் சோடா சேர்த்ததும் சூடாகும்.அப்பொழுது வரும் புகையை சுவாசிக்காமல் இருப்பது நல்லது.

காஸ்டிக் சோடாவை கலக்கி ஒரு இடத்தில் வைத்து விடவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் தயாரித்து வைத்துள்ள காஸ்டிக் சோடா கரைசலை ஊற்றி ஒரு குச்சி கொண்டு தொடர்ந்து கலக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து கலக்கி கொண்டே இருந்தால் தேங்காய் எண்ணெய் பசை போல் மாறும்.இந்த தன்மைக்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

பின்னர் தங்களுக்கு பிடித்த வாசனை திரவியம் சிறிது சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இதை சோப் மோல்டில் ஊற்றி ப்ரிட்ஜில் 8 மணி நேரம் வரை வைக்கவும்.பிறகு தேங்காய் எண்ணெய் சோப் தயாராகி இருக்கும்.

இந்த சோப்பை மேனிக்கு பயன்படுத்தி வந்தால் வயதானாலும் இளமை தோற்றத்துடன் வாழ முடியும்.

Previous articleஇதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!!
Next articleஇரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!!