GOLD RATE: மீண்டும் உயர்ந்தது தங்கம்!! இன்று அதன் விலை நிலவரம்!!
சமீப காலமாக தங்கம் விலை புது புது உச்சத்தை அடைந்து வருகிறது.இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
நேற்றுவரை ஒரு சவரன் தங்கம் ரூ.51 ஆயிரம் என்ற அளவில் விற்று வந்த நிலையில் இன்று ரூ.52 ஆயிரத்தை கடந்து விட்டது.கூடிய விரைவில் ரூ.53 ஆயிரத்தை தொட்டு விடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதனால் தங்கம் வாங்குவது என்பது பலருக்கு கனவாகவே போய்விடும் போல.நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று அதிகரித்து விற்பனையாகி வருகிறது.
நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,430க்கும் ஒரு சவரன் ரூ.51,440க்கும் விற்பனையானது.இந்நிலையில் இன்று அதன் விலை சற்று அதிகரித்து இருக்கிறது.
அதன்படி,சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.560 அதிகரித்து,ரூ.52,000க்கும்,ஒரு கிராம் ரூ.70 அதிகரித்து ரூ.6,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.608 அதிகரித்து ரூ.56,728க்கு விற்பனையாகின்றது.
தங்கம் விலையை போல் வெள்ளி விலையும் அதிகரித்து இருக்கிறது.கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ84க்கும்,ஒரு கிலோ ரூ.84,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.