உங்கள் தலை முடி அடர் கருமையாக இருக்க ஆசையா? அப்போ இந்த எண்ணெயை காய்ச்சி பயன்படுத்தினால் 80 வயதானாலும் வெள்ளை முடி எட்டி பார்க்காது!!

0
191
#image_title

உங்கள் தலை முடி அடர் கருமையாக இருக்க ஆசையா? அப்போ இந்த எண்ணெயை காய்ச்சி பயன்படுத்தினால் 80 வயதானாலும் வெள்ளை முடி எட்டி பார்க்காது!!

இந்தியாவில் தலை முடி கருமையாக இருப்பதை தான் பலர் விரும்புகின்றனர்.ஆனால் மோசமான வாழ்க்கை சூழலால் சிறியவர்கள்,பஇளம் வயதினர் என்று பலருக்கு வெள்ளை முடி எட்டி பார்க்கத் தொடங்கி விட்டது.

நம் தாத்தா பாட்டி காலத்தில் தலைக்கு அரப்பு,சீகைக்காய் பயன்படுத்தி தான் கூந்தலை பராமரித்து வந்தனர்.அதனால் தான் இன்று வயதானவர்களுக்கு எளிதில் நரைமுடி எட்டி பார்ப்பதில்லை.

அதுமட்டும் இன்றி தலைக்கு தேங்காய் எண்ணெய்,மூலிகை எண்ணெய் பயன்படுத்தி வந்தனர்.ஆனால் இன்று இருக்கும் பிள்ளைகள் தலை முடியை ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது இல்லை.இதனால் பள்ளி செல்லும் வயதிலேயே இளநரை முளைக்க ஆரம்பித்து விடுகிறது.

தலை முடி கருமையாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்க இந்த எண்ணெயை தயாரித்து யூஸ் பண்ணுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)கற்றாழை ஜெல்

செய்முறை:-

அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து 1/2 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு ஒரு கற்றாழை மடலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இதை சூடாகி கொண்டிருக்கும் தேங்காய் எண்ணையில் போட்டு மிதமான தீயில் காய்ச்சவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.இந்த கற்றாழை எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி அடர் கருமையாகும்.