நீங்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா? உங்களுக்கான ஒரு ஷாக் நியூஸ் இதோ!!

0
120
#image_title

நீங்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா? உங்களுக்கான ஒரு ஷாக் நியூஸ் இதோ!!

மாறி வரும் உலகில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறி தான்.முன்பெல்லாம் வெளியில் செல்கிறோம் என்றால் வீட்டில் இருந்தே தண்ணீர் எடுத்து செல்வோம்.

செம்பு,பிளாஸ்க் போன்ற அமைப்பு உடைய பாட்டிலில் தான் தண்ணீர் குடிப்பது வழக்கமாக இருந்தது.ஆனால் காலப்போக்கில் வாட்டர் பாட்டில் முதல் பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கிற்கு மாறி விட்டது.

பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் முதல் தள்ளாடும் வயதில் உள்ள முதியவர்கள் வரை அனைவரும் பிளாஸ்டிக் பாட்டிலில் தான் தண்ணீர் குடிக்கின்றனர்.

சிலர் பயணத்தின் போது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை வாங்கி அருந்துகின்றனர்.நீங்கள் வாங்கி குடிப்பது தண்ணீர் அல்ல ஸ்லோ பாய்சன்.ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 100 முதல் 105 நானோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்து இருக்கிறது.

இந்த நீரை குடித்தால் இரத்த செல்கள்,மூளை செல்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு விடும்.பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டால் புற்றுநோய்,இதய நோய் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.