Kerala Recipe: மெது மெது உளுந்து போண்டா!! இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

0
252
#image_title

Kerala Recipe: மெது மெது உளுந்து போண்டா!! இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

வெள்ளை உளுந்தில் மெது மெது போண்டா செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.கேரளாவில் இந்த போண்டா பேமஸான பண்டமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளை உளுந்து
2)பச்சை மிளகாய்
3)இஞ்சி
4)கறிவேப்பிலை
5)பெருங்காயம்
6)தேங்காய் துண்டுகள்
7)பெரிய வெங்காயம்
8)உப்பு
9)எண்ணெய்
10)சோடா உப்பு

செய்முறை:-

ஒரு கப் உளுந்தை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஊற விடவும்.பின்னர் உளுந்து ஊற வைத்த தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

இதை மைய்ய அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் சோடா உப்பு 1/4 தேக்கரண்டி,தூள் உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.

அதன் பின்னர் ஒரு பெரிய வெங்காயம் மற்றும் 4 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி உளுந்து மாவில் போட்டு கலக்கவும்.

பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி அதில் சேர்க்கவும்.1/4 கப் அளவு சிறிது சிறிதாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து கலந்து விடவும்.

இறுதியாக ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் உளுந்து மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

இவ்வாறு செய்தால் உளுந்து போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.இதற்கு தேங்காய் சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.