Kerala Recipe: கேரளா ஸ்டைலில் மொரு மொரு ரவா மீன் ப்ரை – சுவையாக செய்வது எப்படி?

0
271
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் மொரு மொரு ரவா மீன் ப்ரை – சுவையாக செய்வது எப்படி?

அசைவ உணவுகளில் மீன் அதிக சுவை மற்றும் சத்துக்கள் கொண்டது.இந்த மீனை வைத்து ஒரு சுவையான ரெசிபி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)முழு மீன்(சுத்தம் செய்தது) – 2
2)இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
3)மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
4)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
5)உப்பு – தேவையான அளவு
6)கரம் மசாலா – 1 தேக்கரண்டி
7)எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி
8)ரவா – 1/4 கப்
9)கறிவேப்பிலை – 2 கொத்து
10)கொத்தமல்லி தழை – சிறிதளவு
11)பெரிய வெங்காயம் – பாதி
12)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

தங்களுக்கு பிடித்த மீன்(சுத்தம் செய்யப்பட்டது) இரண்டு வாங்கிக் கொள்ளவும்.பிறகு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி மற்றும் 8 பல் தோல் நீக்கிய பூண்டு சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை ஒரு தட்டில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தில் பாதி எடுத்து நறுக்கி மசாலாவில் போட்டுக் கொள்ளவும்.பிறகு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதில் போட்டு கலந்து கொள்ளவும்.

பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும்.வாங்கி வந்த மீனை கீறல் போட்டு மசாலாவை தடவி 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பின்னர் அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.ஒரு
தட்டில் ரவை 1/4 கப் அளவு கொட்டி மசாலாவில் ஊற வைத்த மீனை போட்டு பிரட்டி தோசைக்கல்லில் வைத்து வேக விட்டு எடுத்தால் சுவையான ரவா மீன் ப்ரை ரெடி.

Previous articleஅடிக்கடி தலையில் நீர்கோர்த்துக் கொள்கிறதா? அப்போ நொச்சி இலை நீரில் ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்!!
Next articleஉடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!!