Kerala Recipe: உருளைகிழங்கு குழம்பு கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

0
166
#image_title

Kerala Recipe: உருளைகிழங்கு குழம்பு கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கில் மசாலா குழம்பு செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)உருளைகிழங்கு – 2
2)பெரிய வெங்காயம் – 1
3)பச்சை மிளகாய் -3
4)மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
5)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
6)கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
7)கறிவேப்பிலை – 1 கொத்து
8)கடுகு – 1/2 தேக்கரண்டி
9)தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி
10)உப்பு – தேவையான அளவு
11)தேங்காய் பால் – 1/2 கப்
12)தக்காளி – 1
13)கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
14)இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 2 பெரிய அளவு உருளைகிழங்கு எடுத்து தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் பெரிய வெங்காயம்,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு கடுகு,கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும்.பிறகு அரைத்த இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி எடுக்கவும்.

அதன் பின்னர் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி நறுக்கிய உருளைகிழங்கு துண்டுகளை போட்டு கிளறி விடவும்.

பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை 5 நிமிடங்கள் வேக விடவும்.பிறகு தேங்காய் பால் சேர்த்து 15 நிமிடங்களுக்கு குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான உருளைகிழங்கு குழம்பு தயார்.

Previous articleஅவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை!
Next articleபால் + முட்டையின் வெள்ளை கரு போதும்!! ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்கி விடும்!!