கொளுத்தும் வெயிலில் உடலை குளுமையாக்கும் சர்பத்!! இனி வீட்டிலேயே தாயார் செய்யலாம்!!
உங்கள் உடலை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள சாத்துக்குடி பழத்தில் சர்ப்த் செய்து அருந்துங்கள்.சாத்துக்குடி நம் தமிழ்நாட்டில் அதிகளவு விளையக் கூடிய ஒரு பழ வகை ஆகும்.இவை உடலுக்கு தேவையான வைட்டமின்கள்,ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
இந்த பழத்தின் சாறு உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.இந்த கோடை காலத்தில் அடிக்கடி சாத்துக்குடி சர்ப்த் செய்து குடித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)சாத்துக்குடி
2)ஐஸ்கட்டி
3)சர்க்கரை
4)புதினா
5)தண்ணீர்
6)நன்னாரி சர்பத்
செய்முறை:-
ஒரு சாத்துக்குடி பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்திற்கு சாறு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் தங்களுக்கு தேவையான அளவு வெள்ளை சர்க்கரை மற்றும் ஒரு கிளாஸ் குளிர்ந்த நீர் சேர்த்து கலந்து விடவும்.
பிறகு 3 அல்லது 4 புதினா இலைகளை சாத்துக்குடி ஜூஸில் சேர்க்கவும்.அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி நன்னாரி சர்பத் மற்றும் 2 ஐஸ்கட்டி சேர்த்து குடிக்கவும்.இந்த சாத்துக்குடி சர்பத் உடலை குளிர்ச்சியாகவும்,புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
இதில் சேர்த்துள்ள புதினா உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.விருப்பப்பட்டால் சாத்துக்குடி சர்பத்தில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.