தமிழ் புத்தாண்டு அன்று சமைத்து ருசிக்க வேண்டிய ரெசிபி இது!! தித்திப்பான உணவுடன் சித்திரை திருநாளை வரவேற்றிடுங்கள்!!

0
187
this-is-a-recipe-to-cook-and-enjoy-on-tamil-new-year-welcome-chitra-thirunala-with-delicious-food
this-is-a-recipe-to-cook-and-enjoy-on-tamil-new-year-welcome-chitra-thirunala-with-delicious-food

தமிழ் புத்தாண்டு அன்று சமைத்து ருசிக்க வேண்டிய ரெசிபி இது!! தித்திப்பான உணவுடன் சித்திரை திருநாளை வரவேற்றிடுங்கள்!!

தமிழ் புத்தாண்டு சித்திரை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நன்னாளில் நல்ல விஷயங்களை தொடங்குவது,புதிய தொழில் தொடங்குவது போன்றவற்றை செய்யலாம்.

அதுமட்டும் இன்றி தமிழ் புத்தாண்டு அன்று தித்திப்பான உணவுகளை சமைத்து சாப்பிடுவதால் அந்த ஆண்டு முழுவதும் தித்திப்பான நிகழ்வுகள் மட்டும் நடக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை.ஆகையால் தமிழ் புத்தாண்டு அன்று பாசி பருப்பில் சுவையான பாயாசம் செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பாசி பருப்பு
2)நெய்
3)வெல்லம்
4)முந்திரி
5)திராட்சை
6)பச்சரிசி

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/4 கப் பச்சரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி மூன்று முதல் 4 முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு கப் பாசி பருப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.இந்த பருப்பை மசித்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு கப் வெல்லம் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்.பிறகு அரைத்த பச்சரிசி மாவை அதில் சேர்த்து கிளறவும்.

பின்னர் வேக வைத்த பாசி பருப்பை அதில் சேர்த்து கலந்து விடவும்.பிறகு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் பாயாசத்தை கொதிக்க விடவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் முந்திரி,திராட்சை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து கொதிக்கும் பாசி பருப்பு பாயாசத்தில் சேர்த்து கலந்து விட்டால் தித்திப்பான பாசி பருப்பு பாயாசம் தயார்

Previous articleகடன் தொல்லை? வாங்கிய கடன் அடைய வழி பிறக்கும் இந்த மஞ்சள் தீபத்தை போட்டு வந்தால்!!
Next articleகற்ப்பூரவல்லி + தேங்காய் எண்ணெய் இருந்தால் தலையில் ஒரு வெள்ளை முடி கூட தென்படாது!! 100% அனுபவ உண்மை!