Kerala Recipe: கேரளா ஸ்டைல் துவரை சாம்பார் – மணக்கும் சுவையில் செய்வது எப்படி?
துவரம் பருப்பில் கேரளா முறைப்படி சாம்பார் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.இந்த துவரை சாம்பார் சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷன் ஆகும்.
தேவையான பொருட்கள்:-
1)துவரம் பருப்பு – 100 கிராம்
2)தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
3)கடுகு – 1/2 தேக்கரண்டி
4)கருவேப்பிலை – 1 கொத்து
5)வர மிளகாய் – 2
6)புளி கரைசல் – 3 தேக்கரண்டி
7)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
8)சின்ன வெங்காயம் – 5
10)தக்காளி – 1
11)உப்பு – தேவையான அளவு
12)சீரகம் – 1/4 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து 100 கிராம் அளவு துவரம் பருப்பை போட்டு 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.பிறகு அதில் மஞ்சள் தூள்,சீரகம்,உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
பிறகு சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி பழத்தை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு கிணத்தில் சிறு துண்டு புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் கடுகு,கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
அதன் பின்னர் வர மிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு ஊறவைத்த புளி கரைசல் மற்றும் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் சூடான சுவையான துவரை சாம்பார் தயார்.