“நெல்லிக்காய் லட்டு” சாப்பிட்டால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்!!

Photo of author

By Divya

“நெல்லிக்காய் லட்டு” சாப்பிட்டால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்!!

இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு,மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரு நெல்லிக்காய் லட்டு செய்து சாப்பிட்டு வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

*பெரு நெல்லிக்காய் – 1 கப் அளவு
*வெல்லம் – 1 கப்
*நெய் – 2 தேக்கரண்டி
*மிளகு – 1/4 தேக்கரண்டி
*சீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி
*ஏலக்காய் – ஒன்று

செய்முறை:-

ஒரு கப் நெல்லிக்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கப் வெல்லத்தை,சீரகம்,மிளகு மற்றும் ஏலக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு வாணலி வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த பெரு நெல்லிக்காய் விழுதை சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் அரைத்த வெல்லத்தை கொட்டி 5 நிமிடங்களுக்கு மிதிமான தீயில் வதக்கி எடுக்கவும்.நெல்லிக்காய் கலவை நன்கு கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த நெல்லிக்காய் கலவை இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது கையில் நெய் அப்ளை செய்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதை ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.இந்த லட்டுவை தினமும் காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரிக்கும்.