ஆண்மையை அதிகரிக்கும் பாதாம் பிசின்!! இதை நெயில் வறுத்து சாப்பிட்டால் குதிரை பலம் கிடைக்கும்!!
அதிகரித்து வரும் ஆண்மை குறைபாட்டை இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்திக் கொள்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பிசின்
2)பால்
3)பனங்கற்கண்டு
4)நெய்
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.பிறகு அதில் 25 கிராம் பாதாம் பிசினை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடு படுத்தவும்.அதன் பிறகு அரைத்த பாதாம் பிசின் பொடி மற்றும் சுவைக்காக பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும்.டீ,காபிக்கு பதில் இந்த பாதாம் பிசின் பாலை குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நரம்புகள் பலப்படும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை விதை பருப்பு
2)தேன்
முருங்கை விதை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.250 கிராம் அளவு வாங்கிக் கொள்ளவும்.
செய்முறை:-
இந்த முருங்கை விதையில் உள்ள பருப்பை மட்டும் தனியாக பிரித்து வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.இந்த முருங்கை விதை பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.