திமுகவை தோற்கடித்தால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் – வானதி சீனிவாசன்..!!
தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு பாஜக தீவிரமாக போட்டி போட்டு வருகிறது.
ஆனால் அதற்கு திமுக மற்றும் அதிமுக அணிகள் கடுமையான போட்டி கொடுத்து வருகிறார்கள். தற்போதைய கருத்து கணிப்பு நிலவரப்படி தமிழகத்தில் திமுக தான் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் பிரச்சாரம் முடிவடைய உள்ள சமயத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “கடந்த சட்டப்பேரவை தேர்தலில்ன்போது திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளான நிலையில், தகுதியுள்ள குடும்பதலைவிகளுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறி கிட்டத்தட்ட 2 கோடிக்கும் அதிகமான குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை மறுக்கப்பட்டது.
எனவே இந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் அந்த 2 கோடிக்கும் அதிகமான குடும்பத்தலைவிகளுக்கு எப்போதுமே உரிமைத்தொகை கிடைக்காது. அதுவே இந்த தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்கும். எனவே தமிழக வாக்காளர்கள் அனைவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.