மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!! 

0
217
Udayanidhi will build the fort with every brick laid by the central government..!! Kamal Haasan speech in the campaign..!!
Udayanidhi will build the fort with every brick laid by the central government..!! Kamal Haasan speech in the campaign..!!

மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!! 

கோவை மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் மத்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு கோட்டையையே கட்டிவிடுவார் என்று பேசியுள்ளார். 

கொலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக முகாம் இட்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில்  நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கோவையில் தொகுதியில் திமுக கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களை ஆதரித்து கோவை ராஜவீதியில் பிரச்சாரம் செய்தார். 

அப்பொழுது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் மத்தியில் “கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த தொகுதியில் நான் தோல்வி அடைந்தேன் என்று கூறினார்கள். அது என்னுடைய தோல்வி இல்லை. பணம் இல்லாமல் மக்கள் அன்புடன் எனக்கு கொடுத்த வாக்குகளை நான் என்னுடைய வெற்றியாக கருதுகிறேன்.

அரசியலில் காமராஜருக்கு தோல்வி என்பது கிடையாது. அரசியலில் காமராஜரின் ஆட்சியை பின்பற்றுவதாக ஏராளமான கட்சிகள் கூறியுள்ளன. நான் அரசியலை கருணாநிதி அவர்களிடம் கற்றுக் கொண்டவன். பெரியாரின் மிகப் பெரிய சீடன். என்னிடம் எல்லாம் தோல்வியை காட்டி பயமுறுத்த முடியாது. 

மக்கள் தலைநிமிர்ந்து நடக்கும் இந்த இராஜவீதியில் நான் நடந்திருக்கின்றேன். மீண்டும் இந்த இராஜவீதியில் நான் நடப்பேன். இப்பொழுது நாம் எடுத்திருக்கும் இந்த பாதை நாட்டிற்கான பாதையாகும். கருப்புப் பணத்தை ஒழிக்கின்றோம் என்று கூறி பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அது மக்களின் தலையில் விழுந்த பெரிய இடி. 

70 கோடி இந்தியர்களின் சொத்துகளை 21 பேர்களின் கையில் பாஜக அரசு கொண்டு சேர்த்துள்ளது. அந்த நடவடிக்கையை பகிரங்கமாக கேட்டவன் நான் தான். தன்னுடைய வீட்டை நாட்டுக்கே எழுதிக் கெடுத்த ஜவஹர்லால் நேரு அவர்கள் வாழ்ந்த இந்திய நாட்டில் தமிழகத்துக்கு நீதி கேட்டால் ஏற்கனவே கொடுத்தது பிச்சை என்று கூறுகிறார்கள். 

மக்களின் தலையில் விழுந்த மற்றொரு இடி  பாஜக அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி ஆகும். ஜி.எஸ்.டி வரியில் கோவையில் இருந்த நூற்பாலைகள் அனைத்தும் பஞ்சாய் பறந்துவிட்டது. கடந்த 75 ஆண்டுகளாக நாம் போட்ட உரத்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கின்றது.

வரி செலுத்தாத மாநிலமாக இன்றும் இருக்கும் பீகார் மாநிலத்திற்கு மட்டும் மத்திய அரசு நிதியை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் என்ன கொடுத்து என்ன பலன். அங்கு முன்னேற்றம் இல்லை. அங்கிருந்து வேலை தேடி இங்குதானே வருகிறார்கள். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செங்கல் எடுத்து காமிக்கும் பொழுது உங்களுக்கு கோபம் மட்டும் வருகிறது. ஆனால் மத்திய அரசு ஒவ்வொரு ஊரிலும் நலத்திட்டங்கள் செய்கிறோம் என்ற பெயரில் வெறும் செங்கலை மட்டும் விட்டு செல்கின்றது. அந்த செங்கல்களை உதய்நிதி ஸ்டாலின் அவர்களிடம் கொடுத்தால் பெரிய கோட்டையே காட்டுவார். 

பாராளுமன்றத்தில் தமிழனின் குரல் பலமாக கேட்க வேண்டும். உலகத்தில் எங்கும் நடக்காத சக்தி வாய்ந்த தேர்தல் தற்பொழுது இந்தியாவில் நடக்கப் போகின்றது. மத்தியில் மீண்டும் பாஜக கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது. 

சனாதானத்தை ஒரு நாளும் நாம் அனுமதிக்கக் கூடாது. இந்தியா முழுவதும் திமுக கட்சியின் திராவிடமாடல் ஆட்சி தொடர வேண்டும். சுயமரியாதையை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் உதய சூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்” என்று அவர் பேசினார்.