“வெந்தயம் + உளுந்து” இப்படி பயன்படுத்தினால் சிறுநீரக தொற்று முழுமையாக குணமாகும்!!

Photo of author

By Divya

“வெந்தயம் + உளுந்து” இப்படி பயன்படுத்தினால் சிறுநீரக தொற்று முழுமையாக குணமாகும்!!

உடலில் உள்ள முக்கிய உள்ளுறுப்பு சிறுநீரகம்.சிறுநீரகம் உடலில் தேவையற்ற கழிவுகளை திரவ வடிவில் வெளியேற்றி வருகிறது.

இந்த சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் ஏற்படும்.அதுமட்டும் இன்றி சிறுநீரக கல் உருவாகி அதிக பாதிப்பை உண்டு பண்ணும்.

எனவே சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை அதிக செலவின்றி குணப்படுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த பாட்டி வைத்தியம் உதவும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து
2)வெந்தயம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி கருப்பு உளுந்து மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

கருகிடாமல் வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.வெந்தயம் கருகி விட்டால் கசப்பு தன்மை ஏற்பட்டு விடும்.

வறுத்த இரண்டு பொருட்களையும் நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த வெந்தயம் + கருப்பு உளுந்து பொடி சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடிக்கவும்.

தினமும் காலையில் டீ,காபிக்கு பதில் இந்த பானம் அருந்தி வந்தால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.