அலமாரியில் விளையும் கால்நடை தீவனம்..மாற்றி யோசித்த நாமக்கல் விவசாயி..!!

0
190
Livestock fodder growing in the cupboard.
Livestock fodder growing in the cupboard.

அலமாரியில் விளையும் கால்நடை தீவனம்..மாற்றி யோசித்த நாமக்கல் விவசாயி..!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (58) என்ற விவசாயி அவரது நிலத்தில் மஞ்சள் செடிகளை பயிர் செய்துள்ளார். ஆனால் நோய் காரணமாக மஞ்சள் செடிகள் அழுகியுள்ளன. இதனால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மண்ணை பரிசோதனை செய்து பார்த்ததில் போதிய ஊட்டச்சத்துக்கள் இலை என்பது தெரியவந்தது. இதனால் தான் அவரின் மஞ்சள் பயிர்களும் அழுகியுள்ளன.

மேலும், அவரின் மண்னை காப்பாற்ற வேண்டுமானால் அவர் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டுமென நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன் பின்னர் சரவணன் செயற்கை முறையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளார். அன்றில் இருந்து இன்று வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சரவணன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

அதுமட்டுமல்ல நாமக்கல் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதால் முதலில் சொட்டு நீர் பாசனம் மூலம் மகசூல் செய்து வந்த சரவணன் அடுத்ததாக மண் மற்றும் நீர் இல்லாமல் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பயிர்களை விளைய செய்தார். அதாவது தேங்காய் நாரில் தண்ணீர் சார்ந்த ஊட்டச்சத்து திரவத்தை பயன்படுத்தி பயிர்களை விளைய செய்வது. இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இந்த பயிரை சரவணன் அலமாரியில் விளைய செய்தது தான்.

இந்த முறையை பயன்படுத்தி 500 கிராம் கேப்பையில் இருந்து சுமார் 5 கிலோ வரை கேப்பையை விளைய செய்துள்ளார். அதன்படி, முதலில் கேப்பையை 24 மணி நேரம் ஊறவைத்து பின் அதை ஒரு சாக்குப்பையில் போட்டு வைத்துவிட வேண்டும். 24 மணி நேரத்தில் அந்த கேப்பை முளைத்துவிடும். பின்னர் அதை அலமாரியில் ஒரு தட்டில் பரப்பி வைத்து 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் என 7 நாட்களுக்கு தெளிக்க வேண்டும். 8வது நாளில் கேப்பை ரெடியாகி விடுமாம்.

இந்த முறையில் விளையும் கேப்பை மற்றும் சோளம் ஆகியவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக விற்று லட்சங்களில் லாபம் பார்த்து வருகிறார் விவசாயி சரவணன். இவரின் இந்த மாறுபட்ட விவசாயத்தை பாராட்டி மத்திய அரசு புதுமையான விவசாயி விருதை சரவணனுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous article14 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ஜெஸ்ஸி – கார்த்திக் ஜோடி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!
Next articleஎடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!!