உங்களுக்கு அடிக்கடி சில்லி மூக்கு உடைக்கிறதா? அப்போ இந்த சாறு இரண்டு சொட்டு மூக்கு துவாரத்தில் விடுங்கள்!!
உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சுவாசம் மிகவும் முக்கியம்.மூக்கின் வழியாக ஆக்சிஜன் காற்றை உள்ளிழுத்து உடலில் உள்ள கர்ப்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றோம்.
உடலில் மூக்கு உணர்திறன் வாய்ந்த பகுதி.இந்த மூக்கிற்குள் உள்ள சில்லி மூக்கு உடைந்தால் இரத்தம் வெளியேறும்.இந்த சில்லி மூக்கு உடைய சில காரணங்கள் சொல்லப்படுகிறது.உடல் அதிகளவு சூடானால் சில்லி மூக்கு உடைந்து இரத்தம் வரும்.
அதேபோல் மூக்கின் மேல் பலமாக அடித்தால் சில்லி மூக்கு உடைந்து இரத்தம் வெளியேறும்.நாசி சவ்வுகள் உலர்ந்து போகும் பொழுது அதனுள் இருக்கும் சவ்வுகள் உடைந்தால் மூக்கில் இரத்த போக்கு ஏற்படும்.
இவ்வாறு சில்லி மூக்கு உடைந்து இரத்தம் வந்தால் அதை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியங்கள் உதவும்.
சின்ன வெங்காயம் இரத்தத்தை உறைய வைக்க உதவும் பொருள்.சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி இரத்தம் வரும் மூக்கில் வைத்தால் இரத்தம் உறைந்து போகும்.சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து மூக்கு பகுதியில் விட்டாலும் இரத்தம் உறைந்து போகும்.
கொத்தமல்லி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஆறவிட்டு மூக்கில் 2 அல்லது 3 சொட்டு விட்டால் இரத்த போக்கு நிற்கும்.அதேபோல் துளசியை அரைத்து சாறு எடுத்து மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து வெளியேறும் இரத்தம் நிற்கும்.