இந்த பழக்கங்கள் இருந்தால் இரத்த குழாய் அடைப்பு வர வாய்ப்புகள் இருக்கு!! இளம் தலைமுறையினரை எச்சரிக்கும் மருத்துவர்கள்!!
கடந்த சில வருடங்களாக இரத்த குழாய் அடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.இதில் இன்னும் அதிர்ச்சி கொடுக்கும் விஷயம் என்னவென்றால் இந்த இரத்த குழாய் அடைப்பால் அதிகளவு இளம் தலைமுறையினர் குறிப்பாக ஆண்கள் தான் பாதிக்கின்றனர் என்ற தகவல்களை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரத்த குழாய் அடைப்பு ஏற்பட முக்கிய காரணங்கள்:-
1)மது பழக்கம்
2)புகை பழக்கம்
3)ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்
4)சோம்பேறித்தனம்
5)உடல் பருமன்
6)அதிகப்படியான மன அழுத்தம்
7)உயர் இரத்த அழுத்தம்
8)சர்க்கரை நோய்
இரத்த குழாய் அடைப்பு(மாரடைப்பு) ஏற்படாமல் இருக்க சில வழிமுறைகளை நாம் தவறாமல் பின்பற்றி வர வேண்டும்.
முதலில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய மது மற்றும் குடி பழக்கத்தை நிறுத்திக் கொள்ளவும்.ஆண்களின் உயிரை பறிக்கும் ஒரு கொடிய பழக்கம் மது மற்றும் புகை.அடுத்ததாக காலையில் எழுந்த உடன் 20 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ளவும்.இதை தினமும் செய்து வந்தால் உடலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
அதன் பின்னர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம்.உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் அதை குறைக்க கூடிய உணவுகளை உட்கொள்ளுதல் நல்லது.உடல் உழைப்பு இருந்தால் சோம்பேறித்தனம் ஏற்படாது.
உணவு முறையில் தனி அக்கறை செலுத்த வேண்டும்.கொழுப்பு நிறைந்த உணவுகள்,துரித உணவுகளை தவிர்த்தல் முக்கியம்.அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்க தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யலாம்.இதனால் இரத்த குழாய் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.