உங்களின் அக்குளில் அடிக்கடி கட்டி உருவாகிறதா? இது புற்றுநோய் கட்டியானு இங்கு செக் பண்ணிக்கோங்க!!
உங்களில் பலருக்கு அக்குளில் கொப்பளம் உருவாகி அதிக தொந்தரவுகளை ஏற்படுத்தி இருக்கும்.அக்குள் பகுதியில் அதிகளவு தொற்று கிருமிகள் தேங்கி இருந்தால் இது போன்று கட்டிகள் உருவாகும்.
அக்குள் பகுதியில் உள்ள நிணநீர் சுரப்பி வீங்கும் பொழுது அவை கட்டிகளாக தோன்றும்.அக்குள் இதுபோன்று கட்டிகள் உருவாகினால் அவை சில சமயம் தானாகவே மறைந்து விடும்.ஆனால் கட்டிகள் அதிக வலியை உண்டாக்குவதோடு,மறையாமல் இருந்தால் அவை புற்றுநோய் கட்டிகளாக கூட இருக்கலாம்.இவ்வாறு உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றால் உடனே சம்மந்தப்பட்ட மருத்துவரை அணுகுவது நல்லது.
ஆனால் அக்குளில் உருவாகும் கட்டிகள் சில தினங்களில் மறைந்து விடுகிறது என்றால் அவை சாதரண கட்டி தான்.இந்த கட்டிகள் வந்து விட்டால் கையை அசைப்பதில் சிரமம் ஏற்படும்.அக்குள் பகுதியில் கடுமையான வலி உண்டாகும்.இவற்றை சூட்டு கொப்பளம் என்று நினைத்து அலட்சியப்படுத்தாதீர்கள்.
இந்த அக்குள் கொப்பளத்தை குணமாக்க கூடிய வீட்டு வைத்திய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1)அக்குள் பகுதியில் உள்ள தொற்று கிருமிகளை நீக்க வேண்டும்.அதற்கு வெது வெதுப்பான நீரில் காட்டன் துணியை நினைத்து அக்குள் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் கட்டிகள் மறைந்து விடும்.
2)தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அக்குள் பகுதியில் மஜாஜ் செய்து வருவதன் மூலம் கட்டிகளை குணமாக்கலாம்.அது மட்டும் இன்றி இதன் மூலம் மீண்டும் கட்டிகள் வராமல் தடுக்க முடியும்.
3)ஜாதிக்காய் பொடியில் தேநீர் செய்து குடித்து வந்தால் அக்குள் கட்டி பிரச்சனை தீர்வு கிடைக்கும்.
4)மஞ்சள்
ஒரு கப் சூடான நீரில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.இதை ஒரு காட்டன் துணியில் நினைத்து அக்குள் பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கட்டிகள் கரைந்து விடும்.