நைட் டைமில் இதை குடித்தால் சும்மா ஜம்முனு தூக்கம் வரும்!! இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்க!!

Photo of author

By Divya

நைட் டைமில் இதை குடித்தால் சும்மா ஜம்முனு தூக்கம் வரும்!! இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்க!!

எனக்கு இரவில் தூக்கமே வர மாட்டேங்குது என்று புலம்பும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது.அதிகப்படியான வேலைப்பளு,உடல் சார்ந்த பிரச்சனை,அதிகப்படியான மன அழுத்தம் போன்றவை தான் தூக்கத்தை தொலைக்கச் செய்கிறது.

நம் உடல் சீரக இயங்க வேண்டும் என்றால் அதற்கு உறக்கம் மிக மிக முக்கியம்.10 மணி நேரம் உறக்கம் உடலை ஆரோக்கயமாக வைக்கும்.ஆனால் குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது கண்களுக்கும்,மூளைக்கும்,உடலுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும்.

ஆனால் நாம் அவ்வாறு ஒரு தூக்கத்தை தூங்குகிறோமா என்றால் இல்லை என்பது தான் பதில்.பலர் இரவு நேரத்தில் தூங்குவதே இல்லை.ஒரு சிலருக்கு நிம்மதியான தூக்கம் கிடைப்பதே இல்லை.மனதிலும்,மூளையிலும் ஏதோ ஒரு சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும்.இப்படி தூக்கத்தை தொலைத்து கொண்டிருக்கும் நபர்களுக்கு என்று முன்னோர்கள் கொடுத்த சென்ற மூலிகை வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

1)வாதுமை கொட்டை பொடி
2)பால்
3)ஜாதிக்காய் பொடி
4)மஞ்சள் தூள்

வாதுமை கொட்டை பொடி மற்றும் ஜாதிக்காய் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.பால் கொதிக்கும் தருணத்தில் 1/4 தேக்கரண்டி வாதுமை கொட்டை பொடி,1/4 தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி சேர்க்கவும்.

ஒரு நிமிடம் கழித்து இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிட்டிகை அளவு மஞ்சள் கலந்து குடிக்கவும்.இரவு உறங்கச் செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக இந்த பாலை குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் இரவில் நல்ல உறக்கம் கிடைக்கும்.