ப்ரிட்ஜ் இல்லாமல் தண்ணீரை கூலிங்காக வைக்க இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்க!
உடல் இயக்கத்திற்கு நீர் இன்றையமையாத ஒன்று.ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.ஆனால் இன்று ஒரு நாளைக்கு 1/2 லிட்டர் நீர் கூட மக்கள் அருந்துவதில்லை.
இதனால் உடல் வறட்சி,உடல் சூடு உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகிறது.இவை பெருமைப்பாலும் கோடை காலத்தில் தான் ஏற்படுகிறது.உடல் புத்துணர்வுடன் இருக்க தங்களால் இயன்ற அளவு நீர் அருந்த வேண்டும்.
வாட்டி எடுக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பெரும்பாலானோர் ப்ரிட்ஜ் வாட்டர் அருந்துகின்றனர்.இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.சிலருக்கு ப்ரிட்ஜ் வாட்டர் ஒத்துக்கொள்ளாது.இவர்களுக்கு சளி,தொண்டை வலி,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.எனவே உடலை குளுமையாக்க ப்ரிட்ஜ் இல்லாமல் எவ்வாறு தண்ணீரை கூல் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நம் முன்னோர்கள் தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்து அருந்தி வந்தார்.இதனால் அவர்களின் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைத்தது.இவை பழைய மெத்தடாக இருந்தாலும் இயற்கையான முறையில் தண்ணீரை குளிர்விக்க சிறந்த முறை ஆகும்.
டேமேஜ் இல்லாத மண் பானை தேர்வு செய்து சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு வீட்டில் எங்கு பானை வைக்கிறீர்களோ அந்த இடத்தில் சிறிது மணலை கொட்டி வைக்கவும்.பிறகு அதன் மேல் மண் பானையை வைத்து தண்ணீரை நிரப்பி வைக்கவும்.இவ்வாறு செய்த ஒரு மணி நேரத்தில் தண்ணீர் குளுமையாகி விடும்.இதை பருகி வருவதன் மூலம் உடல் சூடு குறையும்.
வெளியில் செல்கிறீர்கள் என்றால் பாட்டிலில் நீர் நிரப்பி கொள்ளவும்.பிறகு பாட்டிலை சுற்றி ஒரு ஈரத் துணையை கட்டி எடுத்துச் செல்லவும்.இவ்வாறு செய்வதினால் தண்ணீர் சூடாகாமல் இருக்கும்.