பாம்பு கடி! கங்கையில் தீர்த்தம்! மூடநம்பிகையால் பறிபோனதா இளைஞரின் உயிர்?! அதிர்ச்சி வீடியோ!

0
380
பாம்பு கடி! கங்கையில் தீர்த்தம்! மூடநம்பிகையால் பறிபோனதா இளைஞரின் உயிர்?! அதிர்ச்சி வீடியோ!
GANBGA

பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவம் பார்க்காமல், கங்கை நதியில் மிதக்கவிட்டு உயிரிழக்க செய்துள்ளதாக ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

உத்தர பிரதேசம் மாநிலம், புலன்சாகர் மாவட்டம், ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்தவர் மோகித். 20 வயது இளைஞரான இவர், அதே பகுதியிலுள்ள கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த 26 ஆம் தேதி, மக்களவைத்தேர்தலில் தனது வாக்கினை செலுத்துவதற்காக மோகித் தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.

தேர்தலில் தனது வாக்கினை செலுத்திவிட்டு மோகித் வயல்வெளி வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அவரை விஷநாகம் தீண்டியுள்ளது. (மற்றும் ஒரு தரப்பில் அவரின் வீட்டிலேயே பாம்பு கடித்ததாக சொல்கின்றனர்)

மூடநம்பிகையால் பறிபோன இளைஞரின்
உயிர்

உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு
உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர்
கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.

தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26 ஆம் தேதி
கிராமத்தில் உள்ள தனது… pic.twitter.com/mikKH8Dezp

Niranjan kumar (@niranjan2428) May
2, 2024

உடனடியாக உறவினர்கள் சிலர் மோகித்தை அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு அழித்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். (மற்றும் ஒரு தரப்பினர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவிக்கின்றனர்).

ஆனால், மொகிதீன் உறவினர்கள் அவரை கங்கை நீரில் நனைத்தால் அவர் உடலிலிருந்து விஷ முறிவு ஏற்படும் என்று கூறி, இரண்டு நாட்களாக கங்கை நீரில் மிதக்கவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த காணொளியும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு மூடநம்பிகையால் இளைஞரின் உயிர் பறிபோனதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இளைஞரின் மரணத்தை பொறுத்தவரை இரு வேறு செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து போலீசார் தரப்பில் உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும்.

Previous articleCSK | பேட்டை தோனி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும்! ஓவரா போறிங்க! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
Next articleநீட் தேர்வு முறை! வேதனையுடன் உத்தரவிட்ட நீதிபதி!