CSK | பேட்டை தோனி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும்! ஓவரா போறிங்க! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

0
214
CSK | பேட்டை தோனி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும்! ஓவரா போறிங்க! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
dhoni michal

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துபே, ஜடேஜா, தோனி, ருத்ராஜ் என அனைத்து அதிரடி ஆட்டக்காரர்களும் திக்கு திணறி ஆடியது அப்பட்டமாக தெரிந்தது.

பொதுவாக ஒரு அணியின் ஹோம் டவுன் கிரவுண்ட் அந்த அணிக்கு வெற்றியையே தேடித் தரும். ஆனால் இந்த சீசனில் அது பல திருப்பங்களை தந்துள்ளது. குறிப்பாக சென்னை அணிக்கு நேற்றைய ஆட்டம் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திருக்கலாம்.

நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து வீரர்களும் தடுமாறி தடுமாறினர் என்றாலும், கடந்த எட்டு இன்னிங்ஸ்களாக தட்டினால் ஃபோர், அடித்தால் சிக்ஸ் என்று ஹீரோ போல வளம் வந்த மகேந்திர சிங் தோனி தடவி தடவி ரன் அவுட் ஆகியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

கடைசி இரு ஓவரில் பந்து வீச்சாளர்களின் எமனாக கருதப்பட்ட எம்எஸ் தோனியை எப்படி ரன் எடுக்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற பாடத்தை, மற்ற அணி பந்து வீச்சாளர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளனர் அர்ஷிதீப் சிங்கும், ராகுல் சாகரும்.

தோனி எதிர்பார்த்த இடத்தில் பந்துகளை வீசாமல், சிறப்பான முறையில் ஒழுங்கான 19 வது ஓவரை ராகுல் சாகர் வீச, கடைசி ஓவரை வீசிய அர்ஷிதீப் சிங்கும் தனது பங்கிற்கு சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். பாவம் தோனி தான் எதிகொள்ள முடியாமல் தவித்து கொண்டிருந்தார். இது தோனி ஹேட்டர்ஸ்களுக்கு தீணி போட்டதுபோல் அமைந்துவிட்டது.

இல்லை இல்லை அது அவருக்கு தேவை தான் என்று சென்னை அணி ரசிகர்கள் கூட கருத்து தெரிவிக்கும் அளவிற்கு தோனி கடைசி ஓவரில் ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.

CSK | பேட்டை தோனி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும் ஓவரா போறிங்க கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
ms dhoni darial

ஆம், தோனி கடைசி ஓவரில் டேரியல் மிட்சலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் தானே பேட்டிங் செய்வேன் என்று திமிரோடு நின்ற தருணம் தான், கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சென்னை அணி ரசிகர்களை கூட முகம் சுளிக்க வைத்துள்ளது.

உண்மையை சொல்லப் போனால் டேரியல் மிட்சலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் தோனி களத்தில் திமிராக நின்றதற்கு, அர்ஷிதீப் சிங் சரியான பாடத்தை புகட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி தோனி நின்று சந்தித்த அடுத்த 3 பந்துகளில் 6+1 ரன் மட்டுமே தான் எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் ரன்-அவுட் வேறு. இது அவருக்கு தேவைதான் என்று பல கிரிக்கெட் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் ஒரு கிரிக்கெட் ரசிகரின் சமூகவலைத்தள பதிவில், “நொடி பொழுதில் ஸ்டம்பிங் செய்து அசத்தும் தோணி, தன் அருகில் மிட்சல் வரும் வரையா கவனிக்காமல் இருந்தார்.. ?

தன் அருகில் வந்த வரை ஏன் திரும்பி அனுப்பனும் ?

மிட்சல் டாட் பால் ஆக்கிடுவான்னு தான் ஓடல என்றாலும் தோனியும் டாட் பால் தானே ஆடினார்..?

இவர் ஸ்ட்ரைக்கை தக்க வைக்க மிட்செலை இரண்டு ரன் ஓடி இரண்டு ரன் எடுக்க விடாமல் செய்தார்?

தோனி மிட்சலை திருப்பி அனுப்பியது தன்னை ஒரு பெரிய ஃபினிஷராக மார்கெட் வேல்யூவை தக்கவைத்துக்கொள்ள செய்த கீழ்மையான செயல்.

மிட்சல் பேட்டை தோணி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இவரின் கருத்தை பல ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.