திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை என்று காவல் துறையில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், சற்றுமுன் அவர் சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் அத்தெயிற்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த இரண்டாம் தேதி ஜெயக்குமார் வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்று, அன்று இரவு முதல் அவரை காணவில்லை. என்று, வருடைய மகன் காவல்துறையில் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக மீட்டக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே கடந்த 30ஆம் தேதி ஜெயக்குமார் தனது கைப்படை எழுதிய கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அவர்களால் தனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
மேலும் அந்த கடிதத்தில் நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்து இருப்பது, அவர் அரசியல் ரீதியாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.