Rava Poori Recipe: பொதுவாக நாம் காலை, இரவு டிபன் செய்து தான் சாப்பிடுவோம். வழக்கமான இட்டலி, பொங்கல், தோசை, பூரி, வடை. இந்த பூரிக்கு மட்டும் எப்போதும் தனி பிரியர்களே இருப்பார்கள். இதனை எண்ணெயில் பொறித்து செய்வதால் தினசரி சாப்பிடவில்லை என்றாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் இந்த பூரி செய்து சாப்பிடுவார்கள். காரணம் பூரி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். நாம் இந்த பதிவில் கோதுமை, மைதா இல்லாமல் வித்தியாசமான பூரி எண்ணெய் குடிக்காமல் உப்பலான பூரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை – 1கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ரவையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். சற்று கொரகொரப்பாக தான் தெரியும். அரைத்த எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவில் சிறிதளவு எண்ணெய்யை சூடு செய்து ரவையில் ஊற்ற வேண்டும். பிறது இதில் சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக்கொள்ளவும். கைகளில் ஒட்டும் அளவிற்கு பிசைந்துவிட்டாலும் பரவாயில்லை.
இதனை 1/2 மணி நேரம் ஒரு துணி போட்டு மூடி வைத்துவிட வேண்டும்.
அதன் பிறகு உருண்டைகளாக உருட்டி, பூரிக்கு தேய்ப்பது போல தேய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்த மாவை எண்ணெய் போட்டு சற்று கரண்டியால் இருபுறமும் போட்டு எடுத்தால் உப்பலான பூரி தாயர்.
மேலும் படிக்க: கோதுமை வெங்காய போண்டா..!! செம டேஸ்டா செய்யலாம் வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம்..!!