நீங்கள் அரிசியை ஊறவைத்து சமைக்கிறீர்களா? இது தெரியாம போச்சே..!!

0
270
soak rice before cooking

soak rice before cooking: நமது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது தான் அரிசி. பழங்காலந்தொட்டே இந்த அரிசி நமது பாரம்பரியங்களில் ஒன்றாக உள்ளது. அரிசிகளில் பல வகைகள் உள்ளன. சிவப்பு, கருப்பு.. இன்னும் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழர்களின் வாழ்வியலில் அரிசி என்பது காலை உணவாகவும், மதிய உணவாகுவும், இரவு உணவாகவும் உள்ளது.

இன்றயக்காலத்தில் காலை, மாலை டிபன் என்று என்னவெல்லாமோ செய்து சாப்பிடுகிறோம். ஆனால் அப்போது முதல் நாள் இரவு வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் பழை சோறு, வெங்காயம், பச்சை மிளகாய் வைத்து காலை உணவை முடித்துவிடுவார்கள். இவ்வாறு இரவு தண்ணீரில் ஊறவைத்த சாதத்தில் அவ்வளவு நன்மைகள் உள்ளது. அந்த அரிசியை ஊறவைத்து மாவாக அரைத்து அதனை இட்டலி, தோசை என்று  சாப்பிட்டு வந்திருக்கிறோம். இவ்வாறு இருக்கையில் நாம் வடிக்கும் சாதம் எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா? நாம் இந்த பதிவில் அரிசியை எப்படி சமைக்க வேண்டும் என்பதை (soak rice before cooking benefits in tamil) பார்ப்போம்.

அரிசி சமைக்கும் முறைகள் 

தற்போது எல்லாம்  காலையில் எழுந்து காலை உணவு, மதிய உணவு தயார் செய்ய வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக (How to Cook Rice in Tamil) தயாரித்துக்கொண்டு இருக்கிறோம். அதுவும் குக்கரில் அரிசியை போட்டு அதனை கழுவி கீழே ஊத்திவிட்டு மீண்டும் தேவையான நீர் ஊற்றி அதே குக்கரில் விசில் வைத்து இறக்கினால் சீக்கிரமாக சாதம் தயார்.

ஆனால் இவ்வாறு சமைப்பதால் உடலுக்கு எந்த ஊட்டசத்தும் கிடைக்கபோவதில்லை. நாம் சமைக்கும் அரிசியை குறைந்த பட்சம் 1 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அப்போது தான் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேலும் ஊறவைத்த அரிசியை சமைப்பதால் உடனடியாகவும் சாதம் தயார் ஆகிறது. இது அரிசியை மிருதுவான சாதமாக மாற்றுகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உண்பதற்கு சிரமம் இல்லாமல் சாப்பிடுவார்கள்.

மேலும் ஊறவைத்த அரிசியை சமைத்து சாப்பிடும் போது செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. உடனடியாக ஜீரணம் ஆகிறது.

ஊறவைத்த அரிசியை சமைப்பதால் பைடிக் அமிலத்தை தடுக்கிறது. மேலும் அரிசியில் உள்ள முழு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாதம் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வார்கள். ஆனால் ஊறவைத்த அரிசியை சமைத்து சாப்பிட்டலாம்.

மேலும் படிக்க: உணவு சாப்பிடும் போது கட்டாயம் இதை செய்யாதீர்கள்..!! ஆபத்தாகிவிடும்..!!