லேடிஸ் இது தெரிந்தால்.. உங்கள் பிறப்புறுப்பில் இருக்கின்ற முடியை இனி அகற்ற மாட்டீர்கள்!!
ஆண்களோ,பெண்களோ தங்கள் உடலை சுகாதாரமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.இதற்காக அக்குள்,பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் வளரக் கூடிய முடிகளை ஷேவிங்,வாக்சிங்,ஹேர் ரிமூவல் க்ரீம் பயன்படுத்தி அகற்றும் பழக்கம் பெண்களிடம் அதிகம் உள்ளது.இவ்வாறு செய்வது நல்ல பழக்கமா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில்.
அந்தரங்க பகுதியில் வளரக் கூடிய முடிகளை அகற்றுவதால் அரிப்பு,கொப்பளங்கள்,புண்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.சிலருக்கு எளிதில் நோய் தொற்று ஏற்பட்டு விடும்.
அந்தரங்க பகுதியில் இருக்க கூடிய முடிகள் தான் அந்த இடத்தில் கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க உதவுகிறது.அது மட்டுமின்றி அந்தரங்க பகுதி வறண்டு போகாமல் மிருதுவாக இருக்க அங்கு வளரக் கூடிய முடிகள் தான் காரணமாக உள்ளது.
ஆனால் முடி இருந்தால் தான் நோய் தொற்று ஏற்படும் என்று நினைத்து பல பெண்கள் அதை அகற்றி விடுகின்றனர்.அந்த ப்குதியில் வளரக் கூடிய முடிகளை அகற்றாமல் கத்தரிக்கோல் பயன்படுத்தி வெட்டி விடலாம்.அல்லது ட்ரிம்மர் பயன்படுத்தலாம்.
பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்வது எப்படி?
1)பிறப்புறுப்பு பகுதியில் சோப் பயன்படுத்தக் கூடாது.வெறும் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
2)பிறப்புறுப்பு பகுதியில் வளர்கின்ற முடிகளை அவ்வப்போது வெட்டி அகற்றுவது நல்லது.
3)ஈரமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.உடலுறவுக்கு பின் பிறப்புறுப்பை கழுவி சுத்தம் செய்வது அவசியம் ஆகும்.
4)சூடான நீர் கொண்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்யக் கூடாது.இதனால் வெள்ளைப்படுதல் பிரச்சனை அதிகமாகும்.