“வாழை இலை மாத்திரை” சாப்பிட்டால் வாழ்நாளில் எந்த நோயும் உங்களை டச் பண்ணி பார்க்காது!!
நம் தமிழர் பாரம்பரியத்தில் வாழை இலை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது.வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அதேபோல் வாழை இலையை பொடியாக்கி பயன்படுத்தி வந்தால் பல நோய்கள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வாழை இலை
2)தண்ணீர்
செய்முறை:-
ஒரு முழு வாழையை இலையை எடுத்துக் கொள்ளவும்.அதன் நடுத் தண்டு பகுதியை நீக்கி விடவும்.பின்னர் வாழை இலையை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று முதல் நான்கு முறை அலசி சுத்தம் செய்யவும்.அதன் பின்னர் வாழை இலையை ஒரு காட்டன் துணியில் போட்டு நன்கு காய விட்டு எடுத்துக் கொள்ளவும்.
இந்த வாழை இலை துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு ஜல்லடை பயன்படுத்தி சலித்து எடுத்துக் கொள்ளவும்.
இவ்வாறு செய்தால் வாழை இலை பவுடர் கிடைத்து விடும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி தேவையான அளவு வெது வெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.இந்த மாத்திரைகளை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் வைத்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:-
தினமும் காலை உணவு உட்கொண்ட பின்னர் ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாத்திரையாக எடுத்துக் கொள்ள விரும்பாதவர்கள் வாழை இலையை பொடி செய்து நீரில் போட்டு காய்ச்சி குடிக்கலாம்.அல்லது பச்சை வாழை இலையை அரைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம்.
வாழை இலை மாத்திரையின் பயன்கள்:-
1)உடலில் தேங்கி கிடக்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்ற வாழை இலை மாத்திரை,சாறு அருந்தி வரலாம்.
2)தொடர்ந்து வாழை இலை மாத்திரை சாப்பிட்டு வந்தால் சருமத்தில் ஏற்படுகின்ற அனைத்து பாதிப்புகளும் நீங்கி விடும்.
3)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
4)உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
5)மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் ஒரு கிளாஸ் வாழை இலை சாறு அருந்தலாம்.
6)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற வாழை இலை மாத்திரை உதவுகிறது.
7)உடலில் காயங்கள்,அரிப்பு இருந்தால் வாழை இலையை அரைத்து அந்த இடத்தில் பூசி குளிக்கலாம்.
8)இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வாழை இலை மாத்திரை சாப்பிடலாம்.
9)உடல் சூடு தணிய காலை நேரத்தில் ஒரு கிளாஸ் வாழை இலை ஜூஸ் குடிக்கலாம்.