தொண்டையில் ஏற்படும் கிச் கிச்சை போக்கும் அஞ்சறை பெட்டி பொருட்கள்! உடனே ட்ரை பண்ணுங்க!
பனி,குளிர்,கோடை என்று எந்த காலத்திலும் வரக் கூடிய நோய் பாதிப்புகளில் ஒன்று தொண்டை கரகரப்பு.இந்த பாதிப்பு ஏற்பட்டால் தொண்டையில் அதிகப்படியான எரிச்சல் உண்டாகும்.அது மட்டுமின்றி தண்ணீர் குடிக்க,உணவருந்த மிகவும் சிரமமாக இருக்கும்.
சளி,காய்ச்சல்,தொண்டையில் கிருமி தொற்று,தொடர் இருமல் போன்ற காரணத்தினால் தொண்டை கரகரப்பு ஏற்படுகிறது.இந்த தொண்டை கரகரப்பை நம் முன்னோர்கள் கைவைத்தியம் மூலம் பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்திக் கொள்ள முடியும்.
*உப்பு + தண்ணீர்
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து தொண்டையில் நனையும் படி வாயை கொப்பளித்து வந்தால் கரகரப்பு பிரச்சனை சரியாகும்.
*பூண்டு
ஒரு பல் பச்சை பூண்டை தோல் நீக்கி மென்று சாப்பிட்டால் தொண்டை கரகரப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிந்து விடும்.
*மிளகு + பொட்டுக்கடலை
1/4 கைப்பிடி அளவு போட்டுக்கடலையில் 4 அல்லது 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு அடங்கும்.
*இஞ்சி பானம்
ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு துண்டு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு சூடாக பருகினால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
*பட்டை + மிளகு + வர கொத்தமல்லி
ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு துண்டு பட்டை,2 இடித்த மிளகு மற்றும் 1/2 தேக்கரண்டி இடித்த வர கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் தொண்டை கரகரப்பு முழுமையாக நீங்கும்.
*அரிசி கஞ்சி
2 தேக்கரண்டி அரிசியை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த அரிசி பொடி மற்றும் சிறிது உப்பு கொதிக்க விட்டு குடித்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.