இயற்கை கொடுத்த சஞ்சீவி மூலிகை “அமிர்தவல்லி”!! இதில் கஷாயம் செய்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
நம் உடலுக்கு பல வித நன்மைகள் கொடுக்கும் மூலிகைகளில் ஒன்று சீந்தில் கொடி.இவை வெற்றிலை வடிவில் கசப்பு மற்றும் காரம் நிறைந்த சுவையில் இருக்கும் இந்த சீந்தில் கொடிக்கு அமிர்தவல்லி என்று மற்றொரு பெயர் உள்ளது.இந்த கொடியின் இலை மற்றும் தண்டில் கஷாயம் செய்து குடித்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)அமிர்தவல்லி இலை
2)அமிர்தவல்லி தண்டு
செய்முறை:-
இரண்டு அமிர்தவல்லி இலை மற்றும் நான்கு அல்லது ஐந்து அமிர்தவல்லி தண்டு எடுத்து உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
அதன் பின்னர் இடித்த அமிர்தவல்லி இலை மற்றும் அமிர்தவல்லி தண்டு சேர்த்து மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும்.
அமிர்தவல்லி கஷாயத்தின் பயன்கள்:
1)பல் வலி இருப்பவர்கள் தினமும் ஒரு அமிர்தவல்லி இலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
2)அமிர்தவல்லி கஷாயம் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
3)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சக்தி அதிகமாக வாரத்தில் இருமுறை அமிர்தவல்லி கஷாயம் செய்து குடித்து வரலாம்.
4)அமிர்தவல்லி இலையை பொடியாக்கி டீ போட்டு குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
5)அமிர்தவல்லி கொடியின் தண்டு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அம்மிக்கல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி நெற்றியில் பற்று போட்டால் தீராத தலைவலிக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
6)சுவசக் கோளாறு பிரச்சனை இருப்பவர்கள் தினமும் அமிர்தவல்லி இலை மற்றும் தண்டு போட்டு கொதிக்க வைத்த நீரை ஆவிபிடத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
7)இரத்தத்தை சுத்தப்படுத்தும்
இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேற அமிர்தவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து குடித்து வரலாம்.
8)அமிர்தவல்லி கஷாயம் கல்லீரை சுத்தப்படுத்த உதவுகிறது.
9)அமிர்தவல்லி இலையுடன் சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கும்