ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் அகல் விளக்கு திட்டம்.. மாணவர்களின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும்!! வெளியான அசத்தல் அறிவிப்பு!!

0
219
agal-vizhalaku-project-at-an-estimate-of-rs-50-lakhs-government-will-bear-the-higher-education-expenses-of-the-students-amazing-announcement
agal-vizhalaku-project-at-an-estimate-of-rs-50-lakhs-government-will-bear-the-higher-education-expenses-of-the-students-amazing-announcement

 

ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் அகல் விளக்கு திட்டம்.. மாணவர்களின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும்!! வெளியான அசத்தல் அறிவிப்பு!!

தமிழக சட்டசபை கூட்டத் தொடரானது கடந்த 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் முக்கிய 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.இவை அனைத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஊந்து கோளாக இருக்கும். அதில் முதலாவதாக தற்பொழுது அரசு பள்ளியில் உள்ள ஆய்வகங்களை மேற்கொண்டு மேம்படுத்த 58 கோடி ரூபாய் அளவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழா மற்றும் பாரத சாரண சாரணியர் வைரவிழா ஆகியவை 10 கோடி செலவில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் செலவில் ஆளுமை திறன் மேம்பாட்டு குறித்து பயிற்சிகள் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.அரசு பள்ளிகளைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 42 கோடி ரூபாய் செலவில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.

அதுமட்டுமின்றி மேற்கொண்டு மாணவர்கள் படிக்கும் பொழுதே தொழில்நுட்ப குறித்து அறிவை பெற மாவட்டத்திற்கு ஒரு பள்ளியில் ரோபோடிக் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் மாணவர்களின் கற்றலுக்கு எந்த ஒரு சிறு இடையூறும் ஏற்படாத வண்ணம் மேலும் இணையத்தை எந்த வகையில் உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து “அகல் விளக்கு” என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள் குழுவாக அமைக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.இந்த திட்டமானது 50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளிப்படிப்பை முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வி செலவினை ஏற்கும் வகையில் ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். தற்பொழுது வரை ஆயிரம் ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் ஆயிரம் ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அதேபோல பார்வையற்ற மாண வர்களுக்கு பயன்படும் வகையில் 1.75 கோடி ரூபாய் அளவில் எழுத்துணறி மென்பொருளானது நிறுவப்படும். இது போல எண்ணற்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளது.

 

 

Previous articlePF BALANCE: உங்கள் PF கணக்கின் பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பது தெரியவில்லையா.. உடனே இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்!
Next articleஇந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு  வெளியான சூப்பர் அறிவிப்பு!