இந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு  வெளியான சூப்பர் அறிவிப்பு!

0
208
Additional admissions from this year..Super announcement for LAW students!
Additional admissions from this year..Super announcement for LAW students!

 

இந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு  வெளியான சூப்பர் அறிவிப்பு!

ஜூன் மாதம் 20 தேதி தொடங்கிய சட்ட சபை கூட்டத்தொடர், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . பல்வேறு துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களது துறைகளில் மேற்கோள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசி வருகின்றனர்.அந்த வகையில் சட்ட துறை அமைசர் ரகுபதி அவர்கள் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ,வேலூர்,விழுப்புரம்,தருமபுரி,இராமநாதபுரம்,சேலம், தேனி என மொத்தமாக ஆறு சட்ட கல்லூரிகள் உள்ளன.அதில் 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு என இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன.இனி வரும் 2024-2025- கல்வியாண்டு முதல் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது.குறிப்பாக முதலாமாண்டு சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 80-லிருந்து 120 ஆக அதிகரிக்கப்படும்.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆண்டு சட்டப்படிப்பில் 240 மாணவர்களும், 5 ஆண்டு சட்டப்படிப்பில் 240 மாணவர்களும் ஆக மொத்தம் 480 மாணவர்கள் அரசு சட்டக் கல்லூரிகளில் கூடுதலாக அனுமதிக்கப்படுவர் என கூறினார்.மேலும் பட்டறைப்பெரும்புதூரில் இயங்கி வரும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் புதிதாக 5 ஆண்டு சட்டப் படிப்பும், புதுப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் புதிதாக 3 ஆண்டு சட்டப் படிப்பும் வரும் கல்வியாண்டு அதாவது 2024-2025 முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் புதிதாக நீதிமன்றங்கள் திறக்க முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous articleரூ 50 லட்சம் மதிப்பீட்டில் அகல் விளக்கு திட்டம்.. மாணவர்களின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும்!! வெளியான அசத்தல் அறிவிப்பு!!
Next articleகள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!!