கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!!

0
316
dmk-is-the-main-accomplice-in-the-scam-issue-action-by-edappadi
dmk-is-the-main-accomplice-in-the-scam-issue-action-by-edappadi

கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்பொழுது அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.குறிப்பாக இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மிகவும் கரார் காட்டி வருகிறார்.அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையானது அதிதீ தீவிரமாக உள்ளது.நேற்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற பொழுது கருப்பு உடையுடன் உள் நுழைந்து சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதிமுக அமளியில் ஈடுபடுவதாக வெளிநடப்பு செய்யப்பட்டனர்.அதேபோல இன்று உள் நுழைந்த உடனே மீண்டும் அமளியில் ஈடுபட்டுள்ளதாக சஸ்பெண்ட் செய்யக் கோரி அமைச்சர் கூறினார்.ஆனால் இதனை முதல்வர் ஏற்கவில்லை.அந்த வகையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் நடவடிக்கைகள் மூலம் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.இதனின் முதல் கட்டமாக உயிரிழந்தவர்கள் சார்பாக இந்த வழக்கை விசாரிக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமென்றும் குறிப்பாக இது அவசரக் கட்ட வழக்காக உடனடியாக விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

அது மட்டுமின்றி கள்ளச்சாராய விற்பனையானது எந்த ஒரு நிர்வாகிகளின் ஆதரவின்றி நடந்திருக்காது அவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.இந்த வழக்கானது விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு மேற்கொண்டு சிபிசிஐடி இது குறித்து விசாரித்து வருவதாகவும் அரசு சார் வழக்கறிஞர் தெரிவித்தார்.இதனையடுத்து இந்த கள்ளச்சாராய விற்பனையால் கிட்டத்தட்ட 60 உயிர்கள் பலியான நிலையில் இது குறித்து போராட்டம் நடத்துவதற்கு அதற்குண்டான பணிகளையும் செய்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக இன்று வெளிநடப்பு செய்யப்பட்ட அதிமுக நேரடியாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த வழக்கு முழுவதும் சிபிஐ எடுத்து நடத்த வேண்டுமென்ற  கோரிக்கையை அவரிடம் வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.சிபிஐ விசாரிக்கும் பட்சத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் சிக்க வாய்ப்புள்ளதாகவும் அதனை மறைக்கவே இந்த பத்து லட்சம் நிவாரணம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ஆளும் கட்சி செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.அதிமுகவின் இந்த உத்வேகம் திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது.இந்த வழக்கு முழுவதும் சிபிஐ விசாரிக்கும் பட்சத்தில் பலரது குட்டுக்கள் வெளிவருவது மறுக்கப்படாத உண்மை என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Previous articleஇந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு  வெளியான சூப்பர் அறிவிப்பு!
Next articleFLASH: பிடிவாரண்ட் அலர்ட்.. பதறியடித்து ஓடிய உதயநிதி!! சனாதன பேச்சு குறித்து அதிரடி நடவடிக்கை!!