கழுத்து சுளுக்கை 5 நிமிடத்தில் சரி செய்யும் சூப்பர் வீட்டு வைத்தியம் இதோ!!

0
242
Here is a super home remedy to fix neck sprain in 5 minutes!!
Here is a super home remedy to fix neck sprain in 5 minutes!!

கழுத்து சுளுக்கை 5 நிமிடத்தில் சரி செய்யும் சூப்பர் வீட்டு வைத்தியம் இதோ!!

திடீரென்று கழுத்தை திருப்புதல்,திரும்பி படுத்தல்,கை கால்களை தேவையில்லாமல் அசைத்தல் போன்ற காரணங்களால் சுளுக்கு ஏற்படுகிறது.

அது மட்டுமின்றி உடலில் பொட்டாசியம்,கால்சியம் ஆகிய ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் சுளுக்கு ஏற்படும்.இந்த சுளுக்கு பாதிப்பை எளிதில் குணமாக்குவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கல் உப்பு
2)பூண்டு

செய்முறை:-

இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள பூண்டு மற்றும் கல் உப்பை போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை சுளுக்கு பிடித்த இடத்தில் பற்று வந்தால் அவை ஓரிரு தினங்களில் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்

செய்முறை:-

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கற்றாழை ஜெல்லை போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சுளுக்கு பிடித்த இடத்தில் பூசி வந்தால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)கிராம்பு
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 100 மில்லி தேங்காய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு 5 கிராம்பை இடித்து எண்ணையில் போட்டு காய்ச்சி சுளுக்கு பிடித்த இடத்தில் அப்ளை செய்து வந்தால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)வெங்காயச் சாறு

செய்முறை:-

ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை காட்டன் துணியில் வைத்து மூட்டை கட்டை சுளுக்கு பிடித்த இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் சுளுக்கு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆலிவ் எண்ணெய்
2)ஆப்பிள் சீடர் வினிகர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இந்த எண்ணையை நன்கு ஆறவிட்டு ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.இதை கழுத்து பகுதியில் அப்ளை செய்து வந்தால் சுளுக்கு பாதிப்பு குணமாகும்.