கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியதாக அறிவிப்பு! கடைசி நோயாளி குணமானதால் மகிழ்ச்சியாக அறிவித்த நாடு?

Photo of author

By Jayachandiran

நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியதால் அங்கு முற்றிலும் கொரோனா நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுவரை 1,504 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 22 பேர் தீவிர மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நியூசிலாந்தில் ஊரடங்கு உத்தரவு 7 வாரங்கள் மிக கடுமையாக கடைபிடித்தனர்.

இந்நிலையில் படிப்படியாக நோயின் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. கடந்த மூன்று வராங்களாக புதிதாக கொரோனா பாதிப்பு யாரும் ஏற்படவில்லை. கடைசியாக கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த நபரும் குணமடைந்து வீடு திரும்பியதால் நியூசிலாந்தில் கொரோனா முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 7,135 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் 3 ஆயிரம் கொரோனா பலியால் முதலிடத்தில் இருக்கிறது. நாளுக்கு நாள் நாடுமுழுவதும் அதிகரித்து வரும் கொரோனோ பாதிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.