நரம்பு வலி.. கை கால் மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் நொச்சி தைலம்!! இதை எப்படி தயாரித்து பயன்படுத்துவது?

0
267
Nerve Pain.. Nochi Ointment Relieves Hand and Foot Joint Pain!! How to prepare and use it?
Nerve Pain.. Nochi Ointment Relieves Hand and Foot Joint Pain!! How to prepare and use it?

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான நொச்சி இலை சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. காய்ச்சல், ஜலதோஷம் கட்டுப்பட நொச்சி இலையில் கசாயம் செய்து பருகலாம்.

இந்த நொச்சி செடி தமிழகத்தில் எல்லா இடங்களிலும் செழிப்பாக வளரக் கூடியவை. இடுப்பு வலி பிரச்சனை இருபவர்கள் நொச்சி இலையை அரைத்து சாறு எடுத்து மிளகுத் தூள் மற்றும் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

நொச்சி இலையை அரைத்து தலையில் பற்றுப்போட்டால் தலைவலி,காய்ச்சல் சரியாகும்.உடல் அசதியாக இருக்கும் போது நொச்சி இலையை நீரில் போட்டு காய்ச்சி குளிக்கும் தண்ணீர் கலந்து நீராடலாம்.இதனால் உடல் அசதி நீங்கி சுறுசுறுப்பை பெற முடியும்.

நரம்பு வலி,நரம்பு சுருட்டல்,கை கால் வலி,மூட்டு வலி பாதிப்பு இருப்பவர்கள் நொச்சி இலை தைலம் தயாரித்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

1)நொச்சி இலை – ஒரு கப்

2)நல்லெண்ணெய் – 100 மில்லி

செய்முறை:

ஒரு கப் நொச்சி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.பிறகு ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பிறகு அரைத்த நொச்சி இலையை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.எண்ணெய் நன்கு கொதித்து தைலம் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி ஆறவிடவும்.இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.

இந்த நொச்சி தைலம் தலைவலி,மூட்டு வலி,நரம்பு வலி,கை கால் வலிக்கு நிவாரணமாக செயல்படுகிறது.

Previous articleபாட்டி வைத்தியம்: உடலில் சகல நோய்களையும் குணமாக்கும் அதிசயம்!! இனி மாத்திரை மருந்து வேண்டாம்!!
Next articleசாதம் மீதமாகிவிட்டதா? கவலையை விடுங்க.. இதை வைத்து நாவில் கரையும் சுவையான பணியாரம் செய்திடலாம்!!